காணும் முறைகள்

பிரொன்சினோவின் "அலிகாரி ஆஃப் டைம் அன்ட் லவ்" ஓவியத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.





இந்த ஓவியத்தின் பின்னிருக்கும் சிக்கலான குறியீடுகள் குறித்து இப்போது கருத்தில் எடுக்க தேவையில்லை, ஏனெனில் அதன் பாலின்ப ஈர்ப்பு சக்தியை முதல் பார்வையில் அது பாதிக்காது. வேறெதாவதற்கு முன்பு, இது ஒரு பாலியல் தூண்டுதல் ஓவியமாகும்.

பிளாரன்ஸின் பிரபு பிரான்ஸ் நாட்டு அரசருக்கு பரிசாக அனுப்பியதே இந்த ஓவியம். மண்டியிட்டு பெண்னை முத்தமிடும் அந்த பையன் "கியுபிட்". அவள் வீனஸ். ஆனால் அவள் உடல் அமைப்பின் ஒழுங்கிற்கும் முத்தம் கொடுப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த படத்தை பார்க்கும் மனிதனுக்கு காட்சியளிப்பது போன்றே அவளது உடல் அமைப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அவனது பாலின்ப ஆர்வத்தை ஈர்ப்பதற்காகவே இந்த ஓவியம் வரையப்பட்டது. அவளது பாலின்ப ஆர்வம் குறித்து செய்வதற்கு ஒன்றுமில்லை. ( இங்கே மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தில் பொதுவாக, பெண்ணின் உடலில் ரோமத்தை வரையாமல் இருப்பது அதே நோகத்தினாலே ஆகும். பாலின்ப சக்திக்கு ரோமம் தொடர்புடையதாக உள்ளது. பெண்ணின் பாலின்ப பேரார்வம் குறைக்கப்பட வேண்டும், இதனால் பார்வையாளன் அவனிடம் மட்டுமே அப்படியான பேரார்வம் இருப்பதாக உணர்வான்.) பெண்கள் பசியின்மைக்கு உணவளிக்கவே உள்ளனர், தங்களுக்கென சொந்தமாக எதையும் எடுப்பதற்கல்ல.

இந்த இரண்டு பெண்களின் வெளிப்பாடுகளை ஒப்பிடுக :


இங்க்றேஸின் புகழ்ப்பெற்ற ஓவியத்தின் மாடல் ஒருவர். இன்னொருவர், பெண்கள் சார்ந்த பத்திரிக்கையின் இடம்பெற்ற புகைப்பட மாடல்.

இந்த இரண்டு வழக்கிலும் அவர்களது வெளிப்பாட்டில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருக்கிறதல்லவா?. யார் என்றே தெரியாத ஒரு ஆண், அவன் தன்னை பார்க்கிறான் என கற்பனை செய்துக்கொண்டு, கணக்கிடப்பட்ட ஒரு வசீகரத்தை அவனை நோக்கி வெளிப்படுத்தும் ஒரு பெண்ணின் வெளிப்பாடு அது. அவர்கள் கணக்கெடுக்கையில் அவளது பெண்மையை அவள் வழங்குகிறாள்.

சில நேரங்களில் காதலனும் ஓவியத்தில் இடம்பெறவது உண்மைதான்.


ஆனால் பெண்ணின் கவனம் மிக அரிதாகவே அவனை நோக்கி இருக்கிறது. பல முறை அவனை பார்க்காமல் வேறெங்கோ பார்க்கிறாள் அல்லது படத்திற்கு வெளியே தனது உண்மையான காதலி என நினைப்பவனை அல்லது பார்வையாளனை - உரிமையாளனை நோக்கியே பார்க்கிறாள்.

தனிப்பட்ட ஆபாச ஓவியங்கள் என்ற சிறப்பு வகை ஒன்று இருந்தது (குறிப்பாக பதினெட்டாம் நூற்றாண்டில்), அதில் காதல் செய்யும் தம்பதிகள் தோற்றமளிப்பார்கள். ஆனால் இதிலும், பார்வையாளர் - உரிமையாளர் கற்பனா இன்பத்தில் அந்த இன்னொரு மனிதனை அகற்றி அல்லது அவனுடன் அடையாளம் கண்டுக்கொள்ளும் படி இருப்பான் என்று தெளிவாகிறது. மாறாக, ஐரோப்பிய அல்லாத மரபுகளில் தம்பதிகளின் ஓவியம், பல ஜோடிகளுக்கு காதல் செய்யும் கருத்தை தூண்டிவிடுக்கின்றன. 'நாம் அனைவரும் ஓர் ஆயிரம் கைகள் கொண்டுள்ளோம், ஓர் ஆயிரம் கால்கள் மற்றும் எப்போதும் தனியாக செல்ல மாட்டோம்'.

கிட்டத்தட்ட மறுமலர்ச்சிக்கு பிந்தைய அனைத்து ஐரோப்பிய பாலின்ப பிம்பங்களும், அசலாக அப்படியே அல்லது உருவகத்தில் முன் பகுதி தோற்றமளிப்பதாகவே இருந்தது. இது ஏனெனில், பாலின்ப ஆர்வம் கொண்ட கதாநாயகனே பார்வையாளன் மற்றும் உரிமையாளனாக அதை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இந்த ஆண் முகஸ்துதியின் அபத்தம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொது கல்விசார் கலையில் இதன் உச்சத்தை அடைந்தது.


அரசாங்கத்தில் பணிபுரியும், வணிகம் செய்யும் ஆண்கள் இது போன்ற ஓவியங்களுக்கு கீழ் சந்தித்து பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவன், தான் சாதுர்யமாக ஏமாற்றப்பட்டேன் என நினைத்தால், அவன் ஆறுதலுக்காக மேலே பார்த்துக்கொள்வான். தான் ஒரு ஆண் என்று அவன் பார்த்தது அவனக்கு நினைவுப்படுத்தும்.