அபோகலிப்ஸ் நவ்- ரோஜர் எபர்ட்

பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவின் "அபோகாலிப்ஸ் நவ்" திரைப்படம் ஜோசப் கான்ராட்
எழுதிய “ஹார்ட் ஆஃப் டார்க்னஸ்” என்ற புத்தகத்தின் தழுவல். கார்ட்ஸ் என்ற ஐரோப்பியர்
காங்கோ நதியின் தொலைதூர பகுதிகளுக்குள் ஊடுருவி தன்னை ஒரு கடவுளைப் போல
நிலைநிறுத்திக்கொள்ளும் கதை. ஒரு படகு அவரைக் கண்டுபிடிப்பதற்காக புறப்படுகிறது, அந்த
பயணத்தில் படத்தின் கதைசொல்லி படிப்படியாக நடைமுறை நாகரிகத்தின் மீதான
நம்பிக்கையை இழக்கிறார்; அவரைச் சுற்றியுள்ள காட்டின் பெரும் அடர்த்தியால் அவர்
ஒடுக்கப்படுகிறார், ஒரு பரிதாபகரமான டார்வினிய சோதனை மைதானம் போல், அதில் வாழும்
ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு நாளும் தன்னை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதற்காக
போராடுகிறது.

பயணத்தின் முடிவில் நாம் கார்ட்ஸ் கண்டுபிடித்ததைவிட கார்ட்ஸ் அந்த அடர்ந்த காட்டில் தான்
என்ன கண்டுகொண்டார் என்பதே நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்த பூமியில் நம்முடைய
நாட்களும், வாழ்க்கை முறையும் இயற்கையின் பசி மிகுந்த தாடைகளின் மேல் நிலையில்லாத ஒரு
பலவீனமான கட்டமைப்பாகும், அவை எந்த சிந்தனையும் தயக்கமுமின்றி நம்மை விழுங்கிவிடும்.
ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை முறையே நம்மை அந்த சிந்தனையில் இருந்து மீட்டெடுக்கும் ஒரே
வழியாகும்.


ஒரு வாரத்திற்கு முன்பு நான் கல்கத்தாவில் இருந்தேன், அங்கு ஒரு மைல் தூரமுள்ள ஒரு சதுரமான
முகாமை பார்த்தேன், அதில் பிளாஸ்டிக், அட்டை மற்றும் ஸ்கிராப் மெட்டல் கசிந்த குடிசைகளில்

தலைமுறைகளாக நூறாயிரக்கணக்கானோர் வாழ்கின்றனர், வறுமையின் பிடியில் இருக்கும்
அவர்களிடத்தில் அதிலிருந்து தப்பிக்கும் நம்பிக்கை துளிகூட இல்லாததை நான் பார்த்தேன்.
நம்பிக்கையற்ற அந்த மக்களின் துயரத்தை ஒரு திரைப்படத்துடன் ஒப்பிடுவதை நான்
அர்த்தப்படுத்தவில்லை; அது அநாகரீகமாக இருக்கும். ஆனால் நான் பார்த்ததைக் கண்டு ஆழந்த
சிந்தனையில் மூழ்கினேன், மகிழ்ச்சியான வாழ்க்கை எவ்வளவு விலைமதிப்பற்றது மற்றும்
ஆபத்தானது என்பதை நான் உணர்ந்தேன். அத்தகைய மனநிலையில் நான் "அபோகலிப்ஸ் நவ்"
ஐப் பார்த்தேன், கர்னல் கர்ட்ஸ் (மார்லன் பிராண்டோ) கேப்டன் வில்லார்ட் (மார்ட்டின் ஷீன்)
இப்படத்தில் "திகில்/பயம் (the horror)" பற்றிச் சொல்கிற காட்சிக்கு வந்தேன்.
கார்ட்ஸ் ஒரு அலங்கரிக்கப்பட்ட ஹீரோ, இராணுவத்தின் சிறந்த வீரர்களில் ஒருவரான இவர்,
காட்டுக்குள், அதுவும் எதிரியின் எல்லைக்குள் ஒரு சரணாலயத்தை உருவாக்கி,
மொன்டாக்னார்ட்(Montagnard) பழங்குடியினரை தனது தனியார் இராணுவமாக்கி ஆளுகிறார்.
போலியோவுக்கு எதிராக ஒரு கிராமத்தின் குழந்தைகளை தனது சிறப்புப் படை வீரர்கள் தடுப்பூசி
போட்ட ஒரு நாளைப் பற்றி அவர் வில்லார்ட்டிடம் கூறுகிறார்: "இந்த வயதானவர் எங்கள்
பின்னால் ஓடி வந்தார், அவர் அழுகிறார், அவரால் பார்க்க முடியவில்லை. நாங்கள் அங்கே
திரும்பிச் சென்றோம், தடுப்பூசி போடப்பட்ட ஒவ்வொரு கைகளையும் அவர்கள் வந்து வெட்டி
எரித்துள்ளனர். அங்கே அவர்கள் ஒரு குவியலாக, சிறிய கைகளின் குவியலை வைத்திருந்தனர்.
கர்ட்ஸ் கற்றுக்கொண்டது , வியட் காங் வெற்றிபெற அதிக தூரம் செல்ல தயாராக இருந்தது:
"அப்போது அவர்கள் எங்களை விட வலிமையானவர்கள் என்பதை நான் உணர்ந்தேன்".
அவர்களுக்கு வலுவும், அதைச் செய்வதற்கான பலமும் இருக்கிறது. அந்த மக்கள்போல எனக்கு
10 பிரிவுகள் இருந்தால், எங்களுக்கு இங்குள்ள தொல்லைகள் மிக விரைவாக முடிந்துவிடும்.
தார்மீக மற்றும் அதே நேரத்தில் அவர்களின் ஆதிகால உள்ளுணர்வுகளை கொண்டிராமல்,
உணர்ச்சிவசப்படாமல், தீர்ப்பின்றி கொல்லக் கூடிய மனிதர்களை நீங்கள் கொண்டிருக்க
வேண்டும். " இது கர்ட்ஸ் கண்டுபிடித்த "திகில்/பயம்", மேலும் இது வில்லார்ட்டையும் இவை ஒரு
முடிவுக்கு கொண்டுவர முடியாமல் அச்சுறுத்துகிறது.
இந்த முழு திரைப்படமும் இராணுவத்தின் சிறந்த வீரர்களில் ஒருவரான கார்ட்ஸ் போரின்
யதார்த்தத்தை எப்படி ஆழமாக உள்வாங்கியுள்ளார், இந்த போர் அவருக்கு எவ்வித ஆழ்ந்த மன
அழுத்தத்தையும் விரக்தியையும் அளித்துள்ளது என இவையனைத்தும் வில்லார்ட்டின்
கோணத்திலிருந்தே திரைக்கதை நகர்கிறது.
இந்தப் படம் சினிமாவில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் க்ளைமேக்ஸைக் கொண்டிருக்கிறது,
கார்ட்ஸ் கண்டுபிடித்ததைப் பற்றி கவிதைகளில் வெளிப்படுத்தும் தருணங்கள் இருந்தன. நதிப்
பயணம் கார்ட்ஸ் பற்றி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்குகிறது, மேலும் பிராண்டோ அதை
முழுமையாக நிறைவேற்றுகிறார். 1979 ஆம் ஆண்டில் படம் வெளியானபோது, அவரது நடிப்பு
விமர்சிக்கப்பட்டது மற்றும் அவரது 1 மில்லியன் டாலர் சம்பள காசோலை அதிகம்
விவாதிக்கப்பட்டது, ஆனால் அவர் சரியான தேர்வாக இருந்தார் என்பது படத்தின் மூலம்
தெளிவாகிறது, ஒரு ஐகானாக அவரது அந்தஸ்தின் காரணமாக மட்டுமல்லாமல், அவரது குரலால்
அதை உறுதிப்படுத்துகிறார். அவர் குரல் படத்தில் நுழைகிறது டி.எஸ் எலியட்டின் சொற்களை
மீண்டும் மீண்டும் இருள் அல்லது அரை வெளிச்சத்திலிருந்து அவரது குரல் அந்த வார்த்தைகளை

உச்சரிக்கின்றன. டி.எஸ். எலியட்டின்ன் விரக்தியான வார்த்தைகளை "வெறுமையான
(வெற்றிடமிக்க) ஆண்கள்" என்பதை அந்தக் குரல் படத்தின் இறுதித் தொனியை கட்டமைக்கிறது


முடிவில் மற்றொரு முக்கியமான அம்சமாக புகைப்படக் கலைஞர் (டென்னிஸ் ஹாப்பர்),
எப்படியாவது கார்ட்ஸ் முகாமைக் கண்டுபிடித்து அங்கேயே தங்கி, போதை ஏறி, கார்ட்ஸின்
சாட்சியாகக் இருக்கிறார். கார்ட்ஸ் " ஒரு கவிஞர்- உன்னதமான போர்வீரன்" மற்றும் "நாங்கள்
அனைவரும் அவருடைய குழந்தைகள்" என்று அவர் வில்லார்ட்டிடம் பிதற்றுகிறார். புகைப்படக்
கலைஞரின் இடைவெளியில், கார்ட்ஸ் துண்டிக்கப்பட்டுள்ள படைப்புக்களை நாங்கள்
கேட்கிறோம், அவர் கார்ட்ஸ் பேசி கேட்டிருக்க வேண்டும்: உங்களைப் பற்றி மட்டுமே உங்கள்
தலையில் வைத்துக் கொள்ள முடிந்தால். . . நான் ஒரு ஜோடி கந்தலான நகங்களாக இருந்திருக்க
வேண்டும், ஒரு அமைதியான கடலின் தரையைத் தாண்டி வருகிறேன். . . . " வழிகாட்டி,
கோமாளி, முட்டாள், என்ற பிம்பங்களுக்குரிய புகைப்படக்காரர், வில்லார்ட் மற்றும் கார்ட்ஸுக்கு
இடையிலான புரிதலை வழங்குகிறார்.
ஏன் "அப்போகாலிப்ஸ் நவ்" முடிவில் கொப்போலா மகிழ்ச்சியடையவில்லை என்று வதந்திகள்
நீண்ட காலமாக இருந்தது? கேன்ஸில் நடந்த படத்தின் முதல் காட்சியில், குழப்பம்
தொடங்குவதைக் கண்டேன். கொப்போலா முதலில் திரைப்படத்தை 70 எம்.எம் ரோட்ஷோவாக
கிரெடிட்ஸ் (அவை ஒரு கையேட்டில் அச்சடிக்கப்பட்டிருக்கும்)இல்லாமல் காண்பிக்க
விரும்பினார். ஆனால் 35 எம்.எம் வெளியீட்டிற்கு இறுதித் தலைப்புகள் தேவைப்படும். கார்ட்ஸ்
காம்பவுண்டின் பிரம்மாண்டமான செட்டில் படப்பிடிப்பை முடித்த பின்னர், பிலிப்பைன்ஸ்
அரசாங்கம் அந்த பிரமாண்ட செட்டை அழிக்க வேண்டியிருந்தது , கொப்போலா அதற்கு இணங்க
அதை வெடிக்கச் செய்தார் அதை படம்பிடித்துக்கொண்டார். இந்தக் காட்சியை தனது இறுதி 35
எம்.எம் கிரேடிட்ஸ்ற்கு பயன்படுத்த முடிவு செய்தார், (இது முக்கியமானது) படத்திற்கு மாற்றான
முடிவைக் காட்ட அவர் விரும்பவில்லை. ஐயோ, முடிவுகளைப் பற்றிய குழப்பம் கேன்ஸிலிருந்து
திரைப்பட செவிவழிக் கதைகளாக பரவியது, மேலும் "படத்தின் முடிவு" மூலம் அவர் கார்ட்ஸ்

சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் குறிக்கிறார் என்று பெரும்பாலான மக்கள்
நினைத்தார்கள். 20 வது ஆண்டு படத்தின் குறுந்தகடு வெளியீட்டில், கொப்போலா
பொறுமையாக இதையெல்லாம் மீண்டும் விளக்குகிறார்.
எந்தவொரு நிகழ்விலும், இப்போதிலிருந்து 20 வருட தூரத்தில் மீண்டும் பார்த்தாலும் ,
"அபோகாலிப்ஸ் நவ்" என்பது இந்நூற்றாண்டின் மிகமுக்கியமான படங்களில் ஒன்று என்பது
தெளிவாக உள்ளது. பெரும்பாலான படங்களில் ஒரு சிறந்த காட்சியைக் கொண்டிருப்பது
அதிர்ஷ்டம். "அப்போகாலிப்ஸ் நவ்" சரங்களாக ஒன்றன் பின் ஒன்றாக, நதி பயணத்தை
இணைக்கும் இணைப்பாகக் கொண்டுள்ளன. கர்னல் கில்கோர் (ராபர்ட் டுவால்)
தலைமையிலான வியட்நாம் கிராமத்தின் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் ஒரு சிறந்த காட்சி,
வாக்னரின் "ரைடு ஆஃப் தி வால்கெய்ரிஸ்" விளையாடுவதற்கு ஒலிபெருக்கிகள் அதன்
ஒலியளவை அதிகப் பயன்படுத்துகின்றன. டுவால் தனது நடிப்பிற்காகவும், மறக்கமுடியாத இந்த
"நான் காலையில் நாபாமின் வாசனையை விரும்புகிறேன்."வசனத்திற்காகவும் ஆஸ்கார் விருதை
வென்றார். அவரது வெறுமை பயமுறுத்துகிறது: ஒரு சர்ஃபிங் வெறி, அவர் ஒரு பேரலைகளை
வழங்குவதாகக் கூறப்படும் ஒரு கடற்கரையை விடுவிப்பதற்காக மட்டுமே தாக்குதலுக்கு
ஒப்புக்கொள்கிறார்.
ரோந்து கப்பல் ஒரு சிறிய மீன்பிடி படகில் வரும் ஒரு குடும்பத்தை நிறுத்தி சோதனையில்
ஈடுபடும் காட்சி வரிசையில், ஒரு சிறுமி திடீரென படகில் இருக்கும் அவளது பொருட்களை
தொடுகிறபோது சத்தமிட்டு ஓடுகிறாள், சந்தேகத்தினால் ஜம்பிங் மெஷின் கன்னர் (ஒரு இளம்
லாரன்ஸ் ஃபிஷ்பர்ன்) முழு குடும்பத்தையும் சுட்டுத்தள்ளுகிறான். அந்த பெண் தனது
நாய்க்குட்டிக்காக ஓடியிருப்பது, இறுதியில்தான் தெரியவரும். தாக்குதலில் அவள் உயிருக்குப்
போராடுவது தெரிந்ததும்,படகுத் தலைவர் (ஆல்பர்ட் ஹால்) அவளை மருத்துவ சிகிச்சைக்காக
அழைத்துச் செல்ல விரும்புகிறார். வில்லார்ட் அவளுக்குள் ஒரு புல்லட்டை புதைக்கிறான்; எதுவும்
அவரது பணியை தாமதப்படுத்த முடியாது என்று கூறுகிறார். அவரும் "தலைவரும்" படகில்
அனுபவமுள்ள இரண்டு இராணுவ வீரர்கள் மட்டுமே, புத்தகத்தின் மூலம் விஷயங்களைச்
சரிசெய்ய முயற்சிக்கின்றனர்; பின்னர், விசித்திரமான ஒரு காட்சியில், தலைவர் ஒரு ஈட்டியால்
கொல்லப்படுவதில் ஆச்சரியப்படுகிறார்.
என்னைப் பொறுத்தவரை, வில்லார்ட்டின் குழு உறுப்பினர்களில் ஒருவரான செஃப் (ஃபிரெட்ரிக்
ஃபாரஸ்ட்) மாம்பழங்களைத் தேடி காட்டுக்குள் செல்லுமாறு வற்புறுத்தும்போது, படத்தில் மிகவும்
குறிப்பிடத்தக்க காட்சிகள் நிகழ்கின்றன. வில்லார்ட் அவரைத் தடுக்க முடியாது, எனவே அவர்
அவருடன் இணைகிறார். சிறந்த ஒளிப்பதிவாளரான விட்டோரியோ ஸ்டோராரோ அவற்றை
உயர்ந்த மரங்களின் அடிவாரத்தில் சிறிய மனிதப் புள்ளிகளாகக் காட்டுகிறார், இது ஒரு ஜோசப்
கான்ராட் தருணம், இயற்கை நம்மை எவ்வாறு சிறியதாக ஆக்குகிறது என்பதைக் காட்டுகிறது.
ராக் 'என்' ரோல் இசையில் வரும் பாடல் ஒலிகளால் "தி எண்ட்" உடன் படத்தை திறந்து
மூடுகிறது, மேலும் டிரான்சிஸ்டர் ரேடியோக்களில் ("குட் மார்னிங், வியட்நாம்!") டிஸ்க் ஜாக்களும்
அடங்கும். வில்லார்ட்டின் குழுவினரில் ஒருவரான லான்ஸ் (சாம் பாட்டம்ஸ்), படகின் பின்னால்
சாகச விளையாட்டில் ஈடுபடுவது போன்ற காட்சியும் இசையும் , சர்ரியலிஸ்டிக் தருணங்களை
கோடிட்டுக் காட்டுகிறது. படையினர் வீட்டின் இசையையும், மது மற்றும்

போதைப்பொருட்களையும் தங்கள் தனிமையையும் பயத்தையும் தணிக்க எவ்வாறு
பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.
"பிளாட்டூன்," "தி மான் ஹண்டர்," "ஃபுல் மெட்டல் ஜாக்கெட்" மற்றும் "கேஷுவல்டிஸ் ஆஃப் வார்"
போன்ற பிற முக்கியமான படங்கள், வியட்நாம் தங்கள் சொந்த அணுகுமுறைகளாக
எடுத்துக்கொள்கின்றன. ஒருமுறை ஹவாய் திரைப்பட விழாவில் போரைப் பற்றிய ஐந்து வட
வியட்நாமிய படங்களைப் பார்த்தேன். .
அவர்கள் ஒருபோதும் "அமெரிக்கா", மட்டுமே "எதிரி" என்று குறிப்பிடவில்லை, ஒரு இயக்குனர்
என்னிடம் கூறினார், "எங்கள் மீது சீனா, பிரான்ஸ், யு.எஸ் கூட படையெடுத்துள்ளனர்,
ஒருவிதத்தில் இது எல்லாம் ஒன்றுதான்". ஆனால் அபோகாலிப்ஸ் நவ் ஒரு சிறந்த வியட்நாம்
திரைப்படம், எல்லா சிறந்த படங்களையும் தாண்டி நிற்கும் ஒன்று. ஏனென்றால் இது மற்ற
படங்களைப் போல் இல்லாமல், ஆன்மாவின் இருண்ட இடங்களுக்கு நம்மை இழுத்துச்
செல்கிறது. இது போரைப் பற்றி அல்ல ஒரு யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்துகிறது, அது
நாம் ஒரு போதும் கண்டறிய முடியாத மகிழ்ச்சி.
ஒரு விதத்தில் என்னால் என்னுடைய எண்ணங்களை விளக்கமுடியவில்லை, கல்கத்தாவிலிருந்து
என் எண்ணங்கள் கார்ட்ஸ் கண்டறிந்த திகிலைப் (The Horror) புரிந்துகொள்ள என்னைத்
தயார்படுத்தின. நாம் அதிர்ஷ்டசாலிகள் என்றால், நாம் ஒரு முட்டாளின் சொர்க்கத்தில் நம்
வாழ்க்கையை செலவிடுகிறோம், படுகுழியை எவ்வளவு நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று
ஒருபோதும் தெரியாது. இதைக் கண்டுபிடித்ததே கார்ட்ஸ்-ஐ பித்துப்பிடித்தவர்போல் ஆக்குகிறது.


குறிப்பு: "அபோகாலிப்ஸ் நவ்" பற்றிய எனது அசல் மதிப்பாய்வில் நான் பிரெஞ்சு இயக்குனர்
ஃப்ரான்சிஸ் த்ரூபோவை மேற்கோள் காட்டினேன்: "ஒரு திரைப்படம் சினிமாவை
உருவாக்கியதன் மகிழ்ச்சியையோ அல்லது சினிமா தயாரிப்பதில் ஏற்பட்ட வேதனையையோ
வெளிப்படுத்த வேண்டும் என்று நான் கோருகிறேன். இடையில் நான் எதற்கும் ஆர்வம்
காட்டவில்லை. " கொப்போலாவின் மகிழ்ச்சியும் வேதனையும் "ஹார்ட்ஸ் ஆஃப் டார்க்னஸ்: எ
ஃபிலிம்மேக்கர்ஸ் அபோகாலிப்ஸ்", 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆவணப்படத்தில் பஹ்ர்
மற்றும் ஜார்ஜ் ஹிக்கன்லூப்பர் எழுதிய "அபோகாலிப்ஸ் நவ்" தயாரிப்பது பற்றி தனிப்பட்ட
காட்சிகள் மற்றும் பத்திரிகை உள்ளீடுகளுடன் கொப்போலாவின் மனைவி எலினோர் ரகசியமாக
ஆவணப்படுத்திய காட்சித் தொகுப்புகள் உள்ளன. இந்தப் படத்தின் திட்டம் அவரை சதுப்பு

நிலங்களில் அச்சுறுத்தியதால் கொப்போலா தனது சந்தேகங்களையும் பயத்தையும்
வெளிப்படுத்திய பதிவுகள் அதிலுள்ளன...

நன்றி: www.rogerebert.com