பெண்களின் தனித்து ஒதுங்கும் தனிமைப் போராட்டம்

-அகிலன் லோகநாதன்

'ஒருபோதும் – அரிதாக -  எப்போதாவது - எப்போதும்'( Never Rarely Sometimes Always) திரைப்படத்தின் அடிப்படைக்காரணம் அயர்லாந்து அரசின் கருகலைப்பு தடை சட்டமே. பெண்களின் அகம் மற்றும் புற சிக்கல்களை கவித்துவ நடையுடனும் அரசியல் பார்வையுடனும் இத்திரைப்படம் மென்மையாக உரையாடுகிறது. அயர்லாந்தில் வசித்த 28 வயது பெண் சவீதா ஹாலப்பனவரின் 17 வார கருச்சிதைவின் போது அயர்லாந்து அரசு அக்கருவை கலைக்க அனுமதி மறுத்தது. இதனால் அவர் செப்சிஸ் எனும் தொற்றால் உயிரிழந்தது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

முன்னதாக பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அனுமதி மறுக்கப்பட்டதாக சவீதாவின் உறவினர் கூறியுள்ளார்கள். மேலும் அயர்லாந்து ஒரு கத்தோலிக்க நாடு என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக சவீதாவின் தந்தை குற்றம் சாட்டினார். மத நம்பிக்கையின் வெளிப்படையான தடைகளால் ஏற்படும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் பொதுவெளியில் மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

Watch Never Rarely Sometimes Always | Prime Video

அயர்லாந்தில் கருக்கலைப்பு பற்றிய ஒரு படத்திற்கு சிறு சிகிச்சையை பற்றி எழுதிய ஹிட்மேன், இதில் என்னை நானே கற்றுக் கொள்ள முயற்சித்தேன்" என்றார். "ஆனால் இதுபோன்ற சிறிய அளவிலான அம்சங்களை நான் உருவாக்கிய நேரத்தில், அயர்லாந்தில் ஒரு விஷயத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக யாரும் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை" என பதிவு செய்தார். 

2017 மற்றும் 2018 க்குள், அவரது தடை வடிவத்தை மாற்றும் பல விஷயங்கள் நடந்தன. 2018 இல் கருக்கலைப்பு மீதான தடையை நீக்க அயர்லாந்து வாக்களித்தது. அதே நேரத்தில், டொனால்ட் டிரம்பின் தேர்தலுக்குப் பிறகு பல அமெரிக்க மாநிலங்களில் பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் மேலும் அச்சுறுத்தப்பட்டன.

இந்தக் கருத்து உலகின் அனைத்து இளம் பெண்களுக்கும் பொருத்தமானதும், பொதுவானதுமாக இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களின் தேசியம் எதுவாக இருந்தாலும் இவை அமல்படுத்தப்பட வேண்டியவொன்றாக இருக்கின்றது. 

ஹிட்மேன் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திரைக்கதையை முடித்தார், பல ஆண்டுகளாக இதேபோன்ற அனுபவங்களில் வாழ்ந்த இளம் பெண்களிடம் ஆராய்ச்சி செய்து, கருக்கலைப்பு கிளினிக்குகள் மற்றும் கர்ப்பத்திற்கு ஆதரவான கர்ப்ப மையங்களைப் பார்வையிட்டார். 

எலிசா ஹிட்மேன் எழுதி இயக்கிய இத்திரைப்படம், நியுயார்க் நகரின் பெனிசில்வெனியா கிராமப்புற பகுதியில் ஆதரவற்ற ஒரு பெண்ணின் சிக்கலை அலசுகிறது. தன்னுடைய உறவுக்கார பெண்ணினுடைய உதவியுடன் தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்க நியுயார்க் நகருக்கு செல்கிறாள் 

எலிசா ஹிட்மேன் அயர்லாந்தின் எட்டாவது திருத்தம் பற்றிய கட்டுரைகளைப் படித்தார் மற்றும் அயர்லாந்தில் இருந்து ஐரிஷ் கடல் வழியாக லண்டனுக்கு ஒரு நாள் பயணம் செய்து அனைத்துப் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் அயர்லாந்தின் மறைக்கப்பட்ட புலம்பெயர்ந்த பெண்களின் பதிவுகளை பற்றி தெரிந்துகொண்டார். 


1971-ம் ஆண்டு மருத்துவரீதியான கருக்கலைப்பு சட்டத்தை இந்தியா கொண்டுவந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன்னால் இந்திய கிரிமினல் சட்டப்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாகக் கருதப்பட்டு மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. 
அப்போது வந்த இந்தப் புதிய சட்டம், மருத்துவரீதியான காரணங்களுக்காகவும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தான சூழலிலும், பிறக்க இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தாலோ, பாலியல் வன்முறை போன்ற நிகழ்வுகளால் ஏற்பட்ட கர்ப்பமாக இருந்தாலோ 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம் என்று இந்திய அரசு அறிவித்தது. 

Never Rarely Sometimes Always makes politics of abortion personal in tale  of teen girls on interstate road trip - ABC News

இந்த நாட்டின் நுணுக்கமான கருக்கலைப்புச் சட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் மருத்துவ நிபுணர்கள் செவிலியர்களின் அணுகுமுறை பற்றியும் ஆராய்ந்தார். பெண்களின் மீதான இந்த சிக்கலை கலை வடிவத்தில் நுகர்வோர் மீது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தினால், திரைப்படம் அதன் பார்வையாளர்களில் பலருடன் உரையாடும் மற்றும் பெண்களுக்கு தன்னுடைய உடலியலை பற்றியும் அதன் தேவைகளை பற்றியும் பேசக்கூடிய வெளியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். ஒருவேளை மக்களின் நீண்டகால நம்பிக்கைகளை மாற்றும் விவாதமாகவும் அமையுமென கருதினார். 

இந்தியாவில் ஒரு பெண்ணின் கருவை 12 வாரங்களுக்குள் இருப்பின் ஒருவரும் 12 வாரங்களில் இருந்து 20 வாரங்கள் இருப்பின் இரண்டு மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர். 2002 ல் முதல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் கருகலைப்பு நடைபெற வழிவகை செய்யப்பட்டது. வயது குறைந்த சிறுமி ஒருவருக்கு 20 வாரங்கள் கடந்துவிட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் இச்சட்டத்தை முன்னிருத்தி அனுமதி மறுக்கப்பட்டது. 2020 ஜனவரி 29 ஆம் தேதி கொண்டுவரபட்ட சட்ட திருத்தத்தின்படி 20 வாரங்களாக இருந்த சட்டவரம்பை 24 வாரங்களாக உயர்த்தி சட்டம் இயற்றப்பட்டது. 

பிபிசி, டேங்கோ என்டர்டெயின்மென்ட் மற்றும் முட்ரெஸா மூவீஸ் இணைந்து நிதியுதவி செய்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான திரைப்படங்கள் உருவாகுவதற்கு ஏற்படும் படைப்பு சிக்கல்களை எதிர்கொள்ளும் அவசியமும் உள்ளதாக ஹிட்மேன் குறிப்பிடுகிறார். 

எலிசா ஹிட்மேன் இத்திரைப்படத்தை பற்றி விளக்குகையில், "இக்கதை ஒரு பெண்ணினுடைய பாரங்களுடன் கூடிய வலியையும், அதிலிருந்து வெளிவர முடியாமல் தடுக்கும் சிக்கலான சமூக தடைகளையும் மற்றும் மனிதர்களிடமிருந்து தனித்து ஒதுங்கும் தனிமையையும் உணர்த்தும் என்கிறார். இக்தை கதைக்கான புனைவைத்தாண்டி நேரடியாக ஒருசிக்கலை நமக்கு வெளிப்படுத்துகிறது. 'These untold journeys that women take' என்னும் கட்டுரைகளின் உத்வேகத்தில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான சூழ்நிலையில் அரசியல் மற்றும் சுகாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் தவிப்புகளை பேசுகிறது. 

அயர்லாந்தில், கருவில் உள்ள குழந்தைக்கும், கருவை சுமக்கும் பெண்களுக்கு உள்ளது போன்றே வாழ்வுரிமை உண்டு என்பதை கூறும் எட்டாவது சட்ட வரைவை நீக்க வேண்டுமா அல்லது தக்க வைக்க வேண்டுமா என மக்கள் தங்களது வாக்குகளை அளித்தனர்.

முன்பு, 2016ஆம் ஆண்டு அயர்லாந்தின் சுகாதாரத்துறை 25 சட்ட விரோத கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக தெரிவித்தது. அதே வருடம் சுமார் 3265 பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்காக அயர்லாந்திலிருந்து பிரிட்டனிற்கு பயணம் செய்துள்ளனர்.

கிராமப்புற மருந்தகத்தில் அவளுடைய கருவை கலைப்பதற்கு பெற்றோரின் அனுமதி வேண்டும் என அறிந்து கொள்கிறாள். தான் 17 வயதில் அம்மா ஆவதை அவள் விரும்பவில்லை. அவள் விரும்பாததை சமூக நெருக்கடிகளாலும் அரசியல் சட்டங்களாலும் எதிர்கொள்ள தயாராக இல்லை. அவளுடைய வயிற்றில் வளரும் கருவை அழிக்க தன்னுடைய வயிற்றில் கடுமையாக குத்தி காயப்படுத்திக் கொள்கிறாள். இவை அவளுடைய சமூக அங்கீகாரத்துடன் வெளிப்படுத்த முடியாத உணர்வின் வெளிப்பாடுகளாக உள்ளன. 

அவளை நியுயார்க் நகர மருத்துவமனையில் சந்திக்கும் கெல்லி சேப்மன் உண்மையான கருகலைப்பு சிகிச்சையாளர். அவர் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் ஒரு பெண்ணினுடைய தனிப்பட்ட வாழ்வை பற்றியதும் அது அவளை பற்றி அவளுக்கு மட்டுமே அறிந்தவையாக இருக்கிறது.

Never Rarely Sometimes Always,” a Human Tale of Reproductive Rights | The  New Yorker

அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கேள்விகளுக்கு 'Never Rarely sometimes always' என்ற பதில் தருமாறு கேட்கிறார் சேப்மன். இதிலுள்ள சில வாரத்தைகளைகூட பதிலாக கொடுக்காமல் தயக்கத்துடனும் மௌனத்துடனும் கடக்கும் பதில்கள் பெண்களின் மீதான வலி நிறைந்த உணர்வை கடத்துகிறது. அவளுடைய அமைதியும் சில சைகைகளும் பேச இயலாமல் தழுதழுக்கும் தவிப்புகளும் ஆதிக்கமான சமூகத்தின் பாதிப்புகளையும் அவலங்களையும் மென்மையாக எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பெண்ணினுடைய சிக்கலான தருணங்களிலும், வாழ்வினுடைய அபலையாக்கப்பட்ட உண்மைகளையும் பிரதிபலிக்கிறது. 

ஆட்டுமென்னும் அவளுடைய உறவினரான ஸ்கைலரும் உள்ளூர் மளிகைகடையில் பகுதி நேர வேலை செய்கின்றனர். அவர்களுக்குள் இருக்கும் அமைதியான அல்லது மௌனமான உரையாடல்கள் நமக்கு அவர்களுடைய மனச்சிக்கலை தெரிவிக்கிறது. ஹிட்மேன் முதன்மையாக வெளிப்படுத்துபவை இருவரின் அனுபவங்களையும், எதிர்பாராத ஏமாற்றங்களையுமே. மளிகைகடையில் அவர்களுக்கு தேவையான ஓய்வு நேரம் மறுக்கப்படுவதும், நியுயார்க் நகரின் இரயில் பயணித்தில் சந்திக்கும் வக்கிரங்களையும் அவர்களின் அன்றாட வாழ்வியலை எடுத்துக்கிறது. 

முன்பின் சென்றிறாத நியுயார்க் பயணத்தின் போது ஸ்கைலருக்கு கிடைக்கும் முகம்தெரியாத நபரின் தவிர்க்க இயலாத அறிமுகத்தின் தேவை முக்கியமானது. ஸ்கைலரின் விருப்பமில்லாமல் முத்தமிடும் அந்நபரின் உதவியை ஏற்பதும் அதை ஆட்டுமென் ஆறுதல் படுத்துவதும் ஆண்களின் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது. 

கதையில் இருவருடைய வாழ்க்கையின் பதிவு என்பது திரைப்படத்தின் வழியாக நேரிடையாக நாம் அவர்களை நெருங்குவதும், அவர்களுடைய அனுபவங்களை நாமும் அனுபவிப்பதுமாக அமைகிறது. இரு பெண்களுக்கு இடையிலான புரிந்துணர்வு என்பது சமயத்தில் விட்டு விலகி செல்லாத அளவிற்கான சமூக சிக்கல் யாவற்றையும் எதிர்கொள்வதற்கு நெருக்கமாக புரிந்து கொள்ள கூடியதாக அமைகிறது. 

பேருந்து மற்றும் இரயில் பயணங்களில் ஏற்படும் சந்திப்புகள், பணப் பற்றாக்குறை காரணமாக இரவு உலாவுதல் மூலம் ஏற்படும் மனச்சோர்வு நம்மையும் தொற்றுகிறது. குறைந்த உரையாடல்கள் நெருக்கமான உணர்வு புரிதல்கள் இது போன்ற சிக்கலான காலகட்டத்தில் நமக்கும் மற்றவருக்குமான புரிந்துணர்வின் தேவையை சுட்டிக்காட்டுகிறது. 

இருவர் பேருந்தில் அமர்ந்திருக்கும் பொழுது தங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவரின் விரல்கள் தம்மீது படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஸ்கைலரின் கைகளை தொட்டு அழைக்கும் இளைஞன் செயல் அவர்களால் எதிர்த்து கேள்விக்கேட்கவோ தட்டிக்கழிக்கவோ தவிர்க்க இயலாத காரணமாகிறது. பெண்களின் அவர்களது அனுமதியில்லாமல் அதிக உரிமைகளை பறித்து கொள்ளும் சமூக கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்குகிறார். 

நடு இரவில் பணமில்லாத சூழலில் முன்பின் தெரியாத இளைஞனின் உதவியை நாடுகின்றனர். பணம் எடுக்க ஸ்கைலரை தனியாக அழைக்கும் காரணத்தை இருவரும் புரிந்து கொள்கின்றனர். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு ஸ்கைலரை தேடிச் செல்கிறாள் ஆட்டுமென். விளிம்பு நிலையிலிருந்து கோரப்படும் உதவிகளுக்கு பதிலாக கேட்பதை தருவது உலகெங்கிலும் இருக்கும் சமூக கட்டமைப்பின் பிரதிபலிப்பை கருத இயலும். மேலும் மனிதர்களின் இயல்பாக நடக்கும் தவறுகளுக்கு சமூகம் சுமத்தும் ஒழுக்க விழுமியங்கள் உரிமைகளை பறித்து கொள்வதற்கும் அதை அனுமதியில்லாமல் அவர்களை அல்லது அவர்களின் பொருட்களை அபகரித்து கொள்வதற்கு காரணமாக அமைகிறது. 

Never Rarely Sometimes Always Movie - Release Date , Cast, Trailer & Photos

ஸ்கைலருக்கு விருப்பமில்லாத நிலையிலும் தவிர்க்க இயலாத காரணத்தால் அவளை முத்தமிடும் அந்த இளைஞனுக்கு தெரியாமல் ஸ்கைலரின் கைகளை பிடித்து ஆறுதல் படுத்துகிறாள். மிக மென்மையாகவும் ஆழமாகவும் கடத்தப்பட்டிருக்கும் உணர்வுகள் ஆழமான கலை உணர்வின் மூலம் சமூகத்தை உள் வாங்குவதற்கு வழி செய்திருக்கிறது. பெண்களின் உளவியல் சிக்கல்களை வெளியுலகம் காணாத வெகுசில நிகழ்வுகளை இத்திரைப்படத்தில் காண இயலும்.