சமபாலீர்ப்பாளர் படங்கள் எடுப்பதில் உள்ள இடர்கள்

நிக் ரொமனோ 
தமிழில்: ம.ரெங்கநாதன்
 
Moonlight படத்தின் ஆஸ்கார் அங்கீகாரத்திற்குப் பிறகும், பால் புதுமையினர் பற்றி படம் எடுப்பது மிகக் கடினம் தான்
 
ஜூனில் நடைபெற்ற 'ப்ரைட்' மாதத்தையொட்டி, 6 LGBTQ இயக்குனர்கள் தங்கள் படைப்புகளை மையநீரோட்ட ஹாலிவுட்டில் கொண்டு வருவதில் உள்ள இன்னல்களைப் பற்றி கலந்துரையாடியதில் இருந்து...


*queer - தனிப்போக்காளர்கள்
ஹாலிவுட்டில் சமபால் ஈர்ப்பின் பதிவு

'பியூட்டி அண்ட் தி பீஸ்ட்' படத்தின் இயக்குனர் பில் காண்டன் (Bill Condon) தனது படத்தில் தன்பாலீர்ப்பாளர்களாக வரும் நண்பன் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு "exclusively gay moment in a Disney movie" என்று ட்வீட்டினார். அதைத் தொடர்ந்து 'பவர் ரேஞ்சர்ஸ்' படத்திலும் ஓர் பெண் தன்பாலீர்ப்பாளர் கதாபாத்திரம் வருவதைக் குறிப்பிட்டு 'ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' போன்ற ஊடகங்கள் தன்பாலீர்ப்பாளர் கதாபாத்திர சித்தரிப்பில் 'புதிய வெளிகளை அடைந்திருக்கிறது' என்றும் 'வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது' என்றும் புகழாரம் சூட்டியது. ஆனால் துரதிஷ்டவசமாக அக்கதாபாத்திரங்கள் தங்களைச் சமபால் ஈர்ப்பாளர்களாக உணரும், வெளிப்படுத்தும் தருணங்கள் திரையில் சரியாக கடத்தப்படவில்லை.

This Film Is Not Yet Rated (2006): Best Documentaries On Netflix - AskMen

'ஸ்பா நைட்' படத்தின் இயக்குனர் அன்ட்ரூ ஆஹன் (Andrew Ahn) அளித்த நேர்காணலில், "நான் ஏலியன்: கவனண்ட் (Alien: Covenant) படம் பார்த்தபின் பிறர் சொல்லி தான், அதில் ஒரு ஆண் தன்பாலீர்ப்பாளர் இணை இருப்பது எனக்கு தெரிய வந்தது! இத்தனைக்கும் திரையில் சமபாலீர்ப்பாளர்கள் பற்றி ஏதேனும் பதிவுகளோ, குறியீடுகளோ வருகிறதா என்று கவனமாக உற்று நோக்குபவன் நான். அப்படிப்பட்ட எனக்கே அச்சித்தரிப்பு புலப்படவில்லை என்றால் பாருங்க!" என சிரித்தவாறே குறிப்பிட்டார்.

கே அண்ட் லெஸ்பியன் அலையன்ஸ் அகெய்ன்ஸ்ட் டீபமேசன் (GLAAD) அமைப்பு வெளியிட்ட ஐந்தாவது 'ஹாலிவுட் ரிப்போர்ட் கார்ட்', மையநீரோட்ட படங்களில் சமபாலீர்ப்பாளர்கள் பற்றிய பிரதிநிதித்துவம் மிக மிக குறைவாக இருக்கிறதென்பதை ஊர்ஜிதப்படுத்திகிறது.

Moonlight' cast: Where are they now? | EW.com

2016ல் ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் வெளியிட்ட 125 படங்களில் 23 படங்களில் மட்டுமே தான் LGBTQ கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்
அந்த 23 படங்களிலும், 10 படங்களில் அக்கதாபாத்திரங்கள் ஒரு நிமிடத்துக்கும் குறைவேயான திரைநேரத்தில் தான் வருகிறார்கள்

சுயாதீன வெளி மூலமாக தான் திரையில் பாலீர்ப்பு சார்ந்த வேறுபாடுகளைப் பிரதிபலிக்க வேண்டியுள்ளது. அவ்வெளி தான் கறுப்பினத்தைச் சேர்ந்த 'தனிப்போக்குள்ள' ஒருவனின் கதையான மூன்லைட் படத்திற்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருதினை வெல்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவ்வெளியிலும் சில இடர்கள் இருப்பதாக அப்படத்தின் இயக்குனர் பென் ஜென்கின்ஸ் (Ben Jenkins) குறிப்பிடுகிறார்.

இவ்வெளியில் 25 வருடங்களுக்கும் மேலாக படங்கள் எடுக்கும் 'லவ் இஸ் ஸ்ட்ரெஞ்' படத்தின் இயக்குனர் ஐர சாக்ஸ் (Ira Sachs) அவர்கள் LGBTQ படங்கள் எடுப்பதைப் பெரும் பிரயத்தனமாக உணர்கிறார். விருதுகளை வெல்வதற்கான அறிகுறிகளைக் கொடுக்கும் 'கால் மீ பை யுவர் நேம்' மற்றும் 'மூன்லைட்' படங்களைக் குறித்து, "LGBTQ உள்ளடக்கத்தைக் கொண்டு, அதன் சாத்தியக்கூறுகளை விஸ்தாரிக்கும் எல்லாப் படங்களும் எனக்கு நம்பிக்கையூட்டுகிறது." என்கிறார். "புதிதாக இவ்வெளிக்கு வருபவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளும், பார்வையாளர்களும் எனக்கும் வேண்டும். சமீபத்திய வெற்றிகள் இவையெல்லாம் சாத்தியம் தான் என்றுணர்த்துகிறது." என்கிறார்.

LGBTQ படங்கள் இயக்கியவர்களின் அனுபவங்கள்

1999ல் வெளிவந்த 'But I'm a Cheerleader' மூலம் தன்னை இவ்வெளியில் நிறுவிய இயக்குனர் ஜேமி பேபிட் (Jamie Babbit), 2005 வெளிவந்த 'Brokeback Mountain' படம் மையநீரோட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என்றெண்ணினார். ஆனால் அவ்வாறில்லாமல், தொண்ணூறுகளில் தான் சந்தித்த முட்டுக்கட்டைகளை இன்றளவும் தான் சந்திக்கிறார். "தனிப்போக்காளர்களும், சமபாலீர்ப்பாளர்களும் நிறைந்திருக்கும் கார்ப்பரேட் ஹாலிவுட் நிறுவனம், தற்போதும் பொதுஜனம் இம்மாதிரி கதைகளை விரும்ப மாட்டார்கள் என்று நினைப்பது தான் வருத்தமாக இருக்கிறது. ஆனால் நிஜத்தில் மக்கள் அவ்வாறில்லை என பலமுறை உணர்த்தி இருக்கின்றனர்."

LGBT படங்களை இன்றளவும் குறுகியவட்ட பார்வையாளர்களுக்கானது மட்டும் தான் என்று முத்திரை குத்துகிறார்கள். இத்தவறான புரிதலை 2015ல் வெளிவந்த 'ஐ அம் மைக்கேல்' படத்தின் முதலீடு திரட்டும் சமயத்தில் இயக்குனர் ஜஸ்டின் கெல்லியும் (Justin Kelly) சந்தித்தார். ஜேம்ஸ் ப்ராங்கோ நடித்த தன்பாலீர்ப்பாளர்களாக இருந்து, பின் தன்பாலீர்ப்பை எதிர்க்கும் கிருத்தவ பாதிரியாராக மாறும் ஒருவரைப் பற்றியது. ஜஸ்டின் சந்தித்த தயாரிப்பு நிறுவனங்கள் "நாங்கள் போன வருடம் தான் ஆண் சமபாலீர்ப்பாளர்கள் இருக்கும் ஒரு படமெடுத்தோம், ஆனால் அது தோல்வி அடைந்தது" என்று கூறியதை நினைவு கூர்ந்தார். "ஆனால் அவர்கள் யாரும் 'போன வருடம் எதிர்பால் ஈர்ப்பாளர்கள் பற்றி படம் எடுத்தோம், ஆனால் அது தோல்வி அடைந்தது என்பார்களா?” என வினவுகிறார்.

2017 சண்டான்ஸில் தேர்வான 'பீச் ராட்ஸ்' (Beach Rats) படத்தின் இயக்குனரான 'எதிர்பால் ஈர்ப்பாளார்' எலைசா ஹிட்மன் (Eliza Hittman) தனது படத்திற்கான எதிர்வினையைத் துளியும் எதிர்ப்பார்க்கவில்லை. பதின்வயது பெண்ணின் விருப்பு வெறுப்புகளை அவரது முதல் படத்தில் (It felt like Love) கையாண்டிருந்தார். அதே மாதிரியான பதின்வயது பெண்ணின் விருப்பங்களை, சமபால் ஈர்ப்பாளராக வரும் ஒரு ஆணின் வழியாக, அவனது கண்ணோட்டத்தில் அணுகியபோது அதனை 'ஆண் ஓரினசேர்கையாள உடலுறவால் நிறைந்திருக்கிறது' என நிராகரித்து விட்டனர்.

"உடலுறவையும் தாண்டி பல பரிணாமங்கள் இருந்தும், அதற்கு மட்டுமே எதிர்வினை ஆற்றியது கவலைக்குரியது." என்கிறார். பிரிட்டன் நடிகர் ஹாரிஸ் டிக்கின்சனைக் குறிப்பிட்டு "அதே போல், நடிக்க வருபவர்கள் எவ்விதமான கதாபாத்திரங்களை ஏற்கலாம், ஏற்க கூடாது என்று கூறப்படாத கற்பிதங்கள் இருக்கிறது." என்றார். இன்னும் ஆண் நிர்வாணம் குறித்தும், ஆணின் பாலுணர்ச்சி குறித்தும் நிறைய சமூக தடைக்கட்டுகள் இருப்பதாக கருதுகிறார்.

ட்ரான்ஸ் நேட்டிவ் அமெரிக்கரான சிட்னி ப்ரீலேண்ட், (Sydney Freeland) நியூ மெக்சிகோவில் உள்ள நாவாஜோ ஒதுக்கீட்டில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை 2014ல் Drunktown's Finest என்று படமாக்கினார். அதற்கான முதலீட்டாளர்கள் "இந்த உள்ளடக்கத்தைப் பார்க்க யாரும் வர மாட்டார்கள், மக்களுக்கு இது பிடிக்காது என்றெல்லாம் வாதாடினார்கள்" எனக் குறிப்பிடுகிறார்.

2016 சண்டான்சில் பெரிதாக பாராட்டப் பெற்ற ஆஹனும் இதேப்போன்ற எதிர்வினைகள் சந்தித்தபின் தனது கதையை எடுக்க 'கிக் ஸ்டார்ட்டர்' மூலம் நிதி திரட்டினார். ஆனால் கொரிய-அமெரிக்க குடியிருப்பில் தனிமையில் வாழும் ஒருவனைப் பற்றிய அக்கதைக்கு கிடைத்த பணத்தை வைத்து அவரால் முன்தயாரிப்பு பணிகளைக் கூட முடிக்க இயலவில்லை.

பொதுவாக படைப்பாளிக்கு அதிக சுதந்திரம் இருப்பதாக கருதப்படும் தொலைக்காட்சியும் தற்போது பின்னோக்கி போவதாக 'The L word and Looking' நெடுந்தொடரில் சில பகுதிகளை இயக்கிய பாபிட் கருதுகிறார். "தனிப்போக்காளர்களால் நிறைந்த 'Transparent' தொடர் எனக்கு மிக பிடித்தது தான், ஆனால் அவ்வாறு இந்நேரம் பத்து தொடர்கள் வந்திருக்க வேண்டிய நேரத்தில் ஒன்று கூட இல்லை!" என்கிறார்.

These Are All the Films That 'Call Me by Your Name' References

கடந்த ஐந்து வருடங்களில் மூன்று தனிப்போக்காளர்கள் சார்ந்த தொடர்களை எடுக்க முயற்சித்திருக்கிறார். ஷோடைம், நெட்ப்ளிக்ஸ், HBO நிறுவனங்களின் தலைமைகளிடம் பல சந்திப்புகள் நடந்தாலும், இறுதி ஒப்புதல் மட்டும் கைகூடவில்லை. 'ஷோடைம்' ஒரு திரைக்கதை கலந்தாலோசித்தாலும், அதுவும் மேற்கொண்டு நகரவில்லை. அநேக சமயங்களில் பாப்பிட்டிடம் "பெண் தன்பாலுறவு சார்ந்த தொடரென்றால் கிளர்ச்சியூட்டும் உடலுறவு காட்சிகள் நிறைய இருக்கும் தானே!?" என்ற கேள்வியைத் தான் முன்வைத்திருக்கிறார்கள்.

LGBTQ படைப்புகளைக் கொண்டு சேர்ப்பதில் உள்ள இடர்கள்

$ 1.5 மில்லியன் டாலரில் உருவான 'மூன்லைட்' உலகம் முழுவதிலும் இருந்து 65 மில்லியன் ஈட்டியபோதும், முதலீட்டாளர்கள் மத்தியில் LGBTQ சார்ந்த படங்களை ‘அவர்கள்’ மட்டும் தான் பார்ப்பார்கள் என்றொரு ஒரு கருத்து நிலவுகிறது. முதலீட்டாளர்களுக்கு இன்னும் இதற்கொரு தேவை இருக்கிறதோ, இதனுள் லாபம் இருக்கிறதோ தெரியவில்லை. “படத் தயாரிப்பில் எந்த நிலையை மிகவும் கடினமாக உணர்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல், “முதலீடு கிடைப்பது தான்” என்கிறார் சாக்ஸ். "பணம் திரட்டுவது தான் ஒதுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பதிவு பண்ணுவதில் இருக்கும் மிகப் பெரிய தடை” என்கிறார்.

ஹாலிவுட்டின் தலைமைப் பொறுப்பில் பல LGBTQ நபர்கள் இருந்தும், 'எங்கே LGBTQ கதாபாத்திரங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ' என்ற பயம் தான் அம்மாதிரி படங்களுக்கு அவர்களை முதலீடு செய்வதைத் தடுக்கிறது. உதாரணத்திற்கு ’பியூட்டி அண்ட் பீஸ்ட்’ படத்தை எடுத்துக் கொண்டால், அப்படம் ஈட்டிய $ 1.25 பில்லியனில், $ 85.8 மில்லியன் சைனாவில் இருந்தும், $ 37.5 மில்லியன் தென்கொரியாவில் இருந்தும், $ 14.6 மில்லியன் ரஷியாவில் இருந்தும் வந்தது. இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், அம்மூன்று நாடுகளிலும் LGBTQ பதிவுகளை வழமையாக தணிக்கை செய்து விடுவார்கள். அதனைத் தொடர்ந்து சாக்ஸ், "அமெரிக்காவில் நாம் இவ்விஷயத்தில் முன்னோக்கி செல்கிறோம் என்று நினைக்கும் அதே சமயத்தில், ரஷியா போன்ற சில நாடுகள் LGBTQ பதிவுகளில் பின்னோக்கி போகிறது." என்கிறார். "நான் அங்கு நடைபெறும் ஆண் சமபால் ஈர்ப்பாளர்கள் பட விழாக்களில் பங்கேற்பதுண்டு. கடைசி முறை எனது படங்களை அனுப்பிய விழாவிற்கு 2,3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது!" என நினைவுகூர்ந்தார்.
" தனிப்போக்காளர்கள் சார்ந்த படத்தைத் தான் எடுக்க போகிறேன்." என்று கெல்லி சொன்னவுடனேயே, "அப்படினா, கண்டிப்பா உன் படம் அந்த 40 சென்டர்களில் விற்பனையாகாது" என்று ஒரு கூட்டம் சொன்னதாம். ஆனால் தன்பாலீர்ப்பைப் பற்றிய புரிதலின்மை, ஐயம் மட்டுமல்லாமல் சுயாதீன படத்தயாரிப்பு முறையில் இருக்கும் குறைகளையும் இந்நிலைக்கு காரணமாக சுட்டிக்காட்டுகிறார் கெல்லி. 2000ம் வருடத்திற்கு பின்னர் ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் இம்மாதிரியான கதைகளை தங்களது தனிக்கவனிப்புத்துறைகளான Focus Features, Fox Searchlight அவற்றிக்கு அனுப்பி குறைந்த செலவில் தயாரிக்க ஆரம்பித்தது. "இக்காரணங்களால் எல்லாம் ஒரு ஆண் சமபால் ஈர்ப்பைப் பற்றி படமே எடுக்க முடியாது என்று குறை கூறவில்லை, ஆனால் அம்மாதிரியான ஒரு படத்தை எடுக்க இவ்வளவு இடைஞ்சல்கள் இருக்கிறது என்று கோடிட்டு காட்டவே இவற்றை நான் சொல்கிறேன்." என்றார் கெல்லி.

முதலீடு, வெளியிடுவதில் உள்ள கஷ்டங்களுக்கு அடுத்து விளம்பரம் மற்றோரு பெரிய முட்டுக்கட்டை. "LGBTQ படங்களைத் தேடி பார்ப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. ஆனால், ஒரு ஸ்டூடியோ வெளியிடும் பகட்டான படத்திற்கு கிடைக்கும் விளம்பரத்தில் ஒரு சிறு அளவு கூட LGBTQ படங்களுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் இங்கு பிரச்சனை." என்கிறார் பேபிட். மூன்லைட், தி இமிட்டேசன் கேம், கரோல் போன்ற படங்கள் விருது வெல்லும் சாத்தியக்கூறுகள் அதிகமிருந்ததால் அவைகளுக்கு போதுமான விளம்பரம் கிடைத்தது. "ஆனால் அம்மாதிரி இல்லாமல், வேறுசில சிறு முயற்சிகளை நெட்ப்ளிக்ஸ், அமேசான், சண்டன்ஸ், IFC போன்றவற்றில் வெளியிட முடிந்தாலும், அவற்றிற்கு எவ்வித விளம்பரமும் கிடைப்பதில்லை!" என்கிறார் பேபிட்.

"மேற்க்கூறிய விளம்பரம் எல்லாம் ஒரு விநியோகஸ்தர் கிடைக்கும் பட்சத்தில் தான்." என்கிறார் ஆஹன். "அப்படியே விநியோகஸ்தர் அமைந்தாலும், எங்கள் படம் கண்டிப்பாக திரையரங்குகளில் வெளியாகும் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால், திரையரங்குகள் என்ன திரையிட வேண்டுமென்பதை தாங்களே முடிவெடுக்கிறார்கள். அதே நேரம், அவர்கள் எந்த அடிப்படையில் அவ்வாறு முடிவெடுக்கிறார்கள் என்பதையும் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று." என கூறினார்.

The Problems With "Blue is the Warmest Color." | Bitch Media

அடுத்த இடர் MPAAவும் அது தரும் G, PG, PG-13, R ,NC-17 போன்ற வகைப்பாடுகளும். 'லவ் இஸ் ஸ்டிரெஞ்' படத்தின் *அசப்பியம் காரணமாக, அதற்கு R வகைப்பாடு கொடுத்தது மறுபடியும் சமபால் ஈர்ப்பின் புரிதலின்மை பற்றிய ஓர் உரையாடலுக்கு வழிவகுத்தது. "உண்மையில் அப்படம் சிறுவர்கள் பார்ப்பதற்கு எல்லா வகைகளிலும் பொருத்தமான ஒன்று." என்கிறார் சாக்ஸ். '1984 வேல்ஸ் (Wales) நகரில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுரங்க தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்த ஆண் தன்பாலீர்ப்பாள களப்பணியாளர்கள்' பற்றிய 2014 வெளிவந்த ப்ரைட் (Pride) படத்திற்கு R வகைப்பாடு கொடுத்தபோதும் இதே சர்ச்சை எழுந்தது. 2015ல் வெளிவந்த ஒரு திருநங்கை இளைஞரைப் பற்றிய '3 Generations' படத்திற்கு கிடைத்த R வகைப்பாட்டுக்கு எதிராக மேல்முறையீடு செய்து வெற்றிகரமாக PG-13 வகைப்பாடு வாங்கினார் Harvey Weinstein.
*Obscene Language

"எனக்கு தெரிந்தே பல நண்பர்கள் இந்த R வகைப்பாட்டை பார்த்து, எங்கே அப்படங்கள் தங்கள் பதின்வயது பிள்ளைங்களுக்கு ஏற்புடையதாக இருக்காதோ! என பயந்து அப்படங்களுக்கு கூட்டிப் போகாமல் இருந்தனர்." என வருத்தமாக சாக்ஸ் கூறினார். MPAA கடைப்பிடிக்கும் பல முறைமைகள் ஆட்சேபனைக்குறியது என 2016 வெளிவந்த கிர்பி டிக்கின் 'This Film Is Not Yet Rated' ஆவணப்படத்தில் வரும் "MPAA உறுப்பினர்கள் அனைவரும் குடும்ப கட்டமைப்பில் உள்ள, கல்யாணமானவர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்ற கருத்தை மேற்க்கோள் காட்டினார்..

இவ்வளவு இடர்கள் இருந்தும், இன்னும் தனிப்போக்காளர்கள் கதைகளுக்கு ஹாலிவுட்டில் சில ஆதரவு குரல்கள் இருக்கத் தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஒருவராக சமபால் ஈர்ப்பாளரான மார்கஸ் ஹுவை (Marcus Hu) ஆஹன் சுட்டிக்காட்டுகிறார். அதே நேரத்தில், படத்தயாரிப்புக்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஆதரவு குரல்கள் இல்லாமல் இருந்திருந்தால், தன்னால் 'லவ் இஸ் ஸ்டிரெஞ்' படத்தை எடுத்திருக்க முடியாதென்கிறார் சாக்ஸ். ஒருவகையில் 6 இயக்குனர்களுமே தங்களுக்கான பார்வையாளர்களைத் தாங்களே தேடி கண்டுபிடிக்கிறார்கள். இவர்களில் ஆஹன், ப்ரீலேன்ட், ஹிட்மன் ஆகியோர் Sundance Labs, Cinereach ஆகிய அமைப்புகளின் உதவி பெற்றவர்கள். 2008ல் வெளிவந்த 'மில்க்' படத்தின் இயக்குனர் கஸ் வான் சான்டின் (Gus Van Sant) வழிகாட்டுதலில் வந்தவர் கெல்லி. 'ஐ அம் மைக்கேல்' படத்திற்கு பின் 'J T LeRoy' அவர்களின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கும் படத்தில் மறுபடியும் ஜேம்ஸ் ப்ராங்கோவுடன் இணைகிறார் கெல்லி.

This Film Is Not Yet Rated Is Unstreamable - Slog - The Stranger

திரைப்படம், நிகழ்த்துக் கலைகள், இலக்கியம் ஆகியவற்றில் LGBTQ குரல்களை ஆதரிப்பதில் முன்னைப்புடன் செயல்படும் அரசுசாரா அமைப்பான 'Queer Art'ன் உறுப்பினர் சாக்ஸ். அவர் தற்போதிருக்கும் படத்தயாரிப்பு கட்டுமானத்தில், LGBTQ படைப்புகளைக் கொண்டுவர தோதுவான சூழ்நிலையை உருவாகும் முயற்சியில் இருக்கிறார். "துணிந்து செயல்படுங்கள். இது சாத்தியமா இல்லையா, இதனால் நம் தனிப்பட்ட வாழ்விற்க்கோ, வசதி வாய்பிற்க்கோ ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று யோசிக்காமல் துணிந்து செயல்படுவதைத் தான் நான் முக்கியமாக கருதுகிறேன். அப்படிப்பட்டவர்களால் தான் இன்றைக்கிருக்கும் தனிப்போக்காளர்கள் சினிமாக்கள் உருவாகியிருக்கிறது." என்கிறார் சாக்ஸ்.

"LGBTQ பிரதிநிதித்துவத்தின் முன்னேற்றத்தை மையநீரோட்ட ஹாலிவுட் கையிலெடுக்காது. அங்கொன்றும், இங்கொன்றுமாக அதற்காக வேலை செய்யும் தன்முனைப்பான படைப்பாளிகள் தான் இதனை மென்மேலும் நிகழ்த்த வேண்டும்." என்ற ஆஹனிடம், "ஹாலிவுட்டில் எப்போது மாற்றம் நிகழும் என்று நினைக்கிறீர்கள்?" எனக் கேட்டதற்கு அவரின் பதில் "அதற்கின்னும் இரண்டு, மூன்று 'மூன்லைட்'கள் தேவை." என்கிறார்.


Thanks
www.vanityfair.com - Even in a Post-Moonlight World, It’s Nearly Impossible to Get a Gay Movie Made