ஜோகன்னஸ் வெர்மீரின் ஓவியங்களிலிருந்து போட்டோகிராஃபி நுணுக்கங்கள்


ஓவியத்தின் நீட்சியாக புகைப்படம், புகைப்படங்களின் தொடர்ச்சிதான் சினிமா. ஒருவகையில் சினிமாவின் மூல ஊற்று ஓவியங்கள் என்றே சொல்ல வேண்டும். இன்றளவும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படத்தின் பிம்பங்களை எடுத்துப்பார்த்தால் அதில் கரவாஜியோ, வெர்மீர், மைக்கலாஞ்சலோ, க்ளாட் மோனட், ரெம்ப்ராண்ட், டா வின்சி போன்றோரின் தாக்கங்கள் இருப்பதைக் காணமுடியும். ஒளிப்பதிவாளர்களுக்கு அடிப்படையாக ஓவியம் சார்ந்த புரிதலும், தூரிகைகளின் வாயிலாகவே ஓவியங்களின் பிம்பங்களில் வெளிச்சத்தையும், வண்ணங்களையும் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. ஒரு கலாரசனையான காட்சிக்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டுமானால், அதன் லைட்டிங் வகைமையை ஒரு ஓவியத்தின் பாதிப்பிலிருந்தும், தாக்கத்திலிருந்தும் எடுத்துப் பயன்படுத்துவது இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.
https://i2.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/DBF6ED12-6A6B-4C42-8925-821D35D3D49B-1500x2000.png?resize=1500%2C2000
போட்டோகிராஃபர்களாக வரவிரும்புபவர்கள், சிறந்த புகைப்படங்களைப் பார்த்து, அதில் மனிதர்கள் எங்கு நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்? பின்னணியில் வண்ணங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? போன்ற வரையறைகளை அறிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் ஒரு நொடிக்கு 24 ஃப்ரேம்கள் நகர்கின்றன. அதன்மூலம் ஒரு காட்சியின் உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முற்படுகிறோம். ஆனால், சற்று யோசித்துப் பாருங்கள், யுத்தத்தின் துயரத்தையும், பசியின் கொடுமையையும், வாழ்தலின் அர்த்தத்தையும் ஒரே ஃப்ரேமில் வெளிப்படுத்த வேண்டியது போட்டோகிராஃபர்களுக்கு இருக்கிற சவால். எனவே, எந்தக் கோணத்திலிருந்து காட்சிப்படுத்தினால், அந்த பிம்பத்தின் உணர்வு சரியாகக் கடத்தப்படும் என்றும், எந்தப் பின்புலத்தில், எந்தக் கம்பொஸிஷனில் வைத்து புகைப்படம் எடுத்தால், நாம் நேரடியாக பார்த்து அனுபவிக்கிற உணர்வு புகைப்படம் மூலம் பார்ப்பவர்களைச் சென்றடையும் என்றெல்லாம் போட்டோகிராஃபர்கள் நிறையவே மெனக்கெடுகின்றனர். எனவே, ஒரு ஒளிப்பதிவாளரைப் போலவே, போட்டோகிராஃபரும் ஒரு காட்சியின் உணர்வைக் கடத்தத்தான் போராடுகின்றார். போட்டோகிராஃபியை பொறுத்தவரை ஒரே பிம்பம்தான், ஆனால் அதுவே, சினிமா என்பது அசையும் பிம்பங்களைக் கொண்டிருக்கிறது, இதுவொன்றுதான் வித்தியாசம். எனவேதான், மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களின் ஆரம்பகாலப் பயணத்தை எடுத்துப் பார்த்தால் அவர்கள் போட்டோகிராஃபர்களாகப் பணிபுரிந்திருப்பது தெரியும், அதேபோல, போட்டோகிராஃபியில் சிறந்து விளங்கியவர்கள் சினிமா ஒளிப்பதிவையும் சரியாகச் செய்வார்கள் என்று இயக்குனர்கள் அவர்களைத் தன் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பயன்படுத்திய வரலாறுகளும் எண்ணற்று உள்ளன. 

இந்தக் கட்டுரையில் ஓவியம், போட்டோகிராஃபி, சினிமோட்டோகிராஃபி என மூன்றிற்கும் பொதுவாக உள்ள கம்பொஸிஷன் பற்றி பார்ப்போம். முக்கியமாக, ஜோஹன்னஸ் வெர்மீரின் ஓவியங்களை எடுத்துக்கொண்டு, அதில் அவர் எங்ஙனம் கம்பொஸிஷனை வெளிப்படுத்தியிருக்கிறார், அவரது கம்பொஸிஷனிலிருந்து போட்டோகிராஃபர்களும், சினிமோட்டோகிராஃபர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் உதாரணங்களோடு அலசுவோம். 

ஜோஹன்னஸ் வெர்மீரின் ஓவியங்களைப் பார்ப்பவர்களுக்கு, அவருக்கிருந்த புகைப்படப் பார்வை மற்றும் ஓவியத்தில் அவர் கொண்டுவந்திருக்கிற கம்பொஸிஷன் மீது பெரிய ஈர்ப்பு உண்டாகிறது. ஒரு கேமராவின் கோணத்திலிருந்து வெர்மீரின் கம்பொஸிஷன் அறிவை அறிந்துகொள்ள முயல்கிறோம். 


என்னைப் பொறுத்தவரை, இந்த ஒப்பீடு மிகச்சிறந்தது. போட்டோகிராஃபரின் செயல்பாடுகளுக்கு வெர்மீரின் ஓவியங்கள் அதிக உத்வேகத்தை அளிக்கின்றன. வெர்மீர் போட்டோகிராஃபர்களுக்கு நம்பிக்கையளிக்கிறார். ஏனென்றால், அவர் புகைப்படம் எடுத்தல் மற்றும் ஓவியம் இரண்டிற்குமிடையே பாலமாகச் செயல்படுகிறார், அத்தோடு இரண்டிற்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கிறார். 


மேலும், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஓவியம், இரண்டும் காட்சிக் கலையின் வடிவங்களை ஒன்றுக்கொன்று எதிர்க்கவில்லை என்பதையே காட்டுகின்றன, அத்தோடு அவரே புகைப்படத்தையும், ஓவியத்தையும் நிரப்பும் பணியைச் செய்கின்றார். 

அடுத்ததாக, வெர்மீரின் ஓவியங்களிலிருந்து போட்டோகிராஃபர்களுக்குப் பயன்படக்கூடிய சில உதாரணங்களைப் பார்ப்போம்:

திறந்த மடலை வாசிக்கும் பெண்

இந்த ஓவியத்தில் பெண் நிற்கும் நிலையைக் கவனியுங்கள். அவளே இந்த ஓவியத்தின் மையம். ஓவியத்தில் அவள் செங்குத்தாக நிற்கிறாள். எனவே, இது வெர்ட்டிகல் கம்பொஸிஷன் கொண்ட ஃப்ரேமிங்காக இருக்கிறது. வெர்மீர் இந்த ஓவியத்தை வடிவமைத்திருக்கிற விதத்தைக் கவனியுங்கள். ஓவியத்தில் வலது மற்றும் இடதுபுறங்களில் உள்ள திரைச்சீலைகள், அதாவது சிவப்பு மற்றும் சாம்பல் நிற திரைச்சீலைகள் ஃப்ரேமில் வலதும் இடதுமாக தன் இடத்தைப் பிடித்திருக்க, இதற்கு மத்தியில் அந்தப் பெண் மஞ்சள் வண்ணத்தில் நடுநாயகமாக இடத்தை ஆக்கிரமித்திருக்கிறாள். இதுதான், ஓவியத்திற்கு ஒரு ஆழத்தையும் பரிமாணத்தையும் உண்டாக்குகிறது.
ஃப்ரேமின் முன்பகுதியில் சாம்பல் நிற திரைச்சீலை, அடுத்து ஃப்ரேமின் மேல் இடது மூலையில் சிவப்பு நிற திரைச்சீலை, அதேபோல படுக்கையில் விரிப்புகள் கலைந்து கிடக்கின்றன. அதன் வர்ணங்களையும் கவனியுங்கள். இதற்கு மத்தியில் அந்தப் பெண் ஒரு கடிதத்தைப் படிக்கிறாள். அந்த முகம், அருகிலுள்ள கண்ணாடியில் பட்டுப் பிரதிபலிக்கிறது. சன்னல் திறந்திருக்கிறது. இந்த ஓவியத்திற்கான வெளிச்சம், அந்தச் சன்னலிலிருந்துதான் வருகிறது. இது நிச்சயம் ஒளிப்பதிவாளர்களுக்கான முக்கியக் குறிப்பையும் ஒளித்துவைத்திருக்கிறது. அத்தனை அழகான கம்பொஸிஷனை இந்த ஓவியம் வெளிப்படுத்துகிறது. 

இன்னும் உங்களால், அந்த ஓவியத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பகுத்து ஆராயமுடியவில்லையா? இதற்கடுத்து கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களைக் கவனியுங்கள். அதில், கதாபாத்திரம், திரைச்சீலை என ஓவியத்தில் முக்கியக் காரணிகள் யாவும், அதற்குரிய வண்ணங்களோடு தனித்து அடையாளப்படுத்தப்படுகின்றன. இது நீங்கள் ஓவியத்தை அணுகுவதை இன்னும் எளிமையாக்கும். 
ஃப்ரேமின் மையத்தில் மஞ்சள் நிறத்தில் அந்தப் பெண் நிற்கிறாள். அந்தப் பெண்ணின் இருப்பிடத்தை, சுற்றுப்புறத்தை கருமையாக்குவதன் மூலம் இன்னும் தெளிவாக உணரலாம். 


மூன்று திரைச்சீலைகள் அவளைச் சுற்றியுள்ளன. 
மூன்று திரைச்சீலைகளுக்கு மத்தியில் கடிதத்தை வாசிப்பதில் கவனம் செலுத்தும் பெண்.

 https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/F008A66F-86C8-4C0C-8155-E4F0E11CE4BD-1500x2000.jpeg?resize=1500%2C2000
இந்தப் புகைப்படங்களில் திரைச்சீலைகளின் வண்ணத்தை வேறுபடுத்தி அறிய முடிகிறது. 

https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/09BBDD94-1588-4ABE-A921-86051DC4FE3F-1500x2000.jpeg?resize=1500%2C2000

https://i2.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/047E29F1-A91C-44A3-B818-18C7729AF188-1500x2000.jpeg?resize=1500%2C2000
இதில் எனக்கு மிகவும் பிடித்தது, அந்த பெண்ணின் உருவம் கண்ணாடியில் பிரதிபலிப்பதை ஓவியத்தில் வெளிப்படுத்தியிருக்கும் விதம்.

https://i2.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/10821224-2BBB-41BE-ADF0-805ABB9FA5D3-1500x2000.png?resize=1500%2C2000

ஓவியத்திற்கு சிறப்பான தோற்றம் தருகிற மூலைவிட்ட ‘எக்ஸ்’ அமைப்பையும் கவனியுங்கள்:

https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/AF6E1C56-9264-44E7-BE42-730242CEDE71-1500x2000.jpeg?resize=1500%2C2000

அந்தப் பெண்ணின் தலைப்பகுதியானது எக்ஸின் மையத்தில் இடம்பெறுவதுபோல ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. 

https://i2.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/6ED3C3DE-F9FE-4F0F-92FA-0E4D8BB2D16B-1500x2000.jpeg?resize=1500%2C2000https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/AB3C768B-6CBC-44D4-B7BA-D7E29EEBD2D3-1500x2000.jpeg?resize=1500%2C2000

https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/AB0C9FBC-BFB4-4800-9ADE-91FD4BAF4BE3-1500x2000.jpeg?resize=1500%2C2000

புல்லாங்குழலுடன் ஒரு பெண்

கம்பொஸிஷன் பற்றித் தெரிந்துகொள்ள நான் இந்த ஓவியத்தையும் பரிந்துரைக்கிறேன். இது ஒரு கேமரா மூலம் நாம் படம்பிடிக்கக்கூடிய சக்திவாய்ந்த உருவப்படம் போன்றது. அதாவது மிகச்சிறந்த போர்ட்ரெய்ட் ஓவியம். 
Vermeer girl with flute
இந்தக் கம்பொஸிஷன் மிகச்சிறப்பாகச் செயல்படுவதற்குண்டான காரணிகளாக நான் கருதுவது: ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் பார்வை, அந்தக் கண்பார்வை நேரடியாக நம்மைத் தாக்குகிறது, அந்த நேரடிக் கண்பார்வை தான் இந்த ஓவியத்தின் பலம். இன்றும் கூட போட்டோகிராஃபியில் இந்த நேரடி பார்வை பயன்படுத்தப்பட்டு, பிம்பத்தின் வலிமையைக் கூட்டுகிறது. அடுத்த காரணி, அந்தப் பெண்ணின் தலை மற்றும் கைகளுக்கு இடையிலான முக்கோண அமைப்பு. இறுதியாக எதிர்க்கோணங்களைச் சேர்க்கும் மூலைவிட்ட கம்பொஸிஷன் பாணியில் இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கும் விதம். இவற்றைத்தான் ஒரு போட்டோகிராஃபரும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன. மேலே பார்த்த காரணிகளைத் தகுந்த உதாரணங்களோடு இனி பார்க்கலாம்.

https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/379D9B28-AC4D-450F-A8E8-33B486FA255C.jpeg?resize=1584%2C1867

ஃப்ரேமில் அந்தப் பெண்ணின் முகம் இருக்கும் இடம். 

https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/0E7DD06E-BDF9-4363-81C6-D458471ABA97.jpeg?resize=1584%2C1867

இங்கே, ஃப்ரேமில் அந்தப் பெண்ணின் கைகள் இடம்பெற்றிருக்கிற விதத்தைக் கவனியுங்கள். தலை மற்றும் இரு கைகளைச் சேர்த்துப் பார்க்கையில் ஒரு முக்கோண அமைப்பு கிடைக்கிறது. இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய கம்பொஸிஷன். இதுபோன்ற நுணுக்கங்கள்தான் நீங்கள் எடுக்கிற புகைப்படங்களை அழகாக்குகின்றன. 

https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/3038F43F-96EB-4423-A901-F6CAF919F9C5.jpeg?resize=1584%2C1867
https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/1F4B6430-5228-455E-AA16-2CAFC317B261.jpeg?resize=1584%2C1867

மூலைவிட்டக் கோடுகள் இணையும் இடம். அப்பெண்ணின் முகத்திற்கு அருகில் உள்ளது.
Golden rectangle gridline on Vermeer girl with flutehttps://i2.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/6B2226C5-B22F-41D3-96B7-CD0108591D29.jpeg?resize=1584%2C1867
https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/7A36189C-66A7-46E3-A95C-21D575663F04.jpeg?resize=1584%2C1867

எஜமானி மற்றும் பணிப்பெண்

இந்த ஓவியத்தில் வெர்மீர் பயன்படுத்தியிருக்கிற கம்பொஸிஷன் நுணுக்கங்களைப் பாருங்கள்.
https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/9B0D6DB9-1A0E-4E2C-8E49-421D3810B4C1.jpeg?resize=1642%2C1889
எஜமானி அமர்ந்திருக்கும் தோரணை, உடையலங்காரத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தியிருக்கும் பிரகாசிக்கும் வண்ணம், நிமிர்ந்த அந்தப் பெண்ணின் பார்வை, கம்பீரமான பாவனை போன்றவை முதலாளிக்குரிய மிடுக்கை அளிக்கின்றன. இந்த ஓவியத்தின் தலைப்பைப் பார்க்காமலேயே இது ஒரு எஜமானிக்கும், வேலையாளுக்கும் இடையே நடக்கிற உரையாடல் என பார்த்தவர் எவரும் எளிதில் சொல்லிவிட முடியும். 

https://i2.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/D00D92B8-06D4-4651-83F3-844FCE9EA736.jpeg?resize=1642%2C1889

பணிப்பெண் அணிந்திருக்கும் உடையின் வண்ணம் இருளோடு தொடர்புடையது, அதற்கேற்றாற்போல அவள் பணிவோடு சற்று குனிந்து நிற்கிறார். எஜமானி மற்றும் பணிப்பெண் என இருவரையும் அவர்கள் அணிந்திருக்கிற உடையின் வண்ணங்களே பிரித்து அடையாளப் படுத்துகின்றன. 
https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/CDFD4BBD-14B4-4ED7-B6C6-145FEF3763A2.jpeg?resize=1642%2C1889
இந்த ஓவியத்தில் மூன்று வண்ணங்கள்தான் பிரதானமாக இடம்பெறுகின்றன. அதுவே, ஓவியத்தின் முன்னணியில் இருக்கிற கதாபாத்திரங்களை மிகச்சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன. 

https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/A93FFA36-BFD5-483C-8AEC-113FC8412FDD.jpeg?resize=1642%2C1889

அடுத்து, இருவருக்கிடையே நிகழும் கண் பார்வை மற்றும் அவர்களது கைகளின் பாவனைகள், அவர்கள் வகிக்கிற நிலையை எடுத்துக்காட்டுகிறது. 
https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/FC534F90-D1AD-45C4-AFDA-A187C64C1B84.jpeg?resize=1642%2C1889https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/E26696BE-FB30-487A-9640-C5ACC295AD9E.jpeg?resize=1642%2C1889
இவர்களுக்கு இடைப்பட்ட தூரத்தில் மூலைவிட்ட கோடுகள் சந்திக்கின்றன. 

https://i2.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/F25468A7-B837-45FD-9DD1-1D25E6E8D4E5.jpeg?resize=1642%2C1889

https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/DB79741C-8341-46AD-99C0-B5CB4282B8CE.jpeg?resize=1642%2C1889

வண்ண வேறுபாடுகள் மூலம் இதுவொரு முக்கியமான ஓவியம் எந்த அந்தஸ்தைப் பெறுகிறது. போட்டோகிராஃபர்கள் வண்ணங்களைத் தன் பிரேமில் பயன்படுத்துவதிலும் எச்சரிக்கையோடு செயலாற்ற வேண்டும். அதிகப்படியான வண்ணங்கள் நீங்கள் சொல்லவருகிற கருத்திலிருந்து பார்வையாளர்களை திசைதிருப்பக்கூடும். இதனால்தான் உணர்வை முன்னிறுத்துகிற புகைப்படங்கள் கறுப்பு – வெள்ளையில் எடுக்கப்பட்டு காலங்கடந்து நிற்கின்றன. 

காதல் கடிதம்

கம்பொஸிஷனுக்கான வெர்மீரின் அடுத்த ஓவியம். 
https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/90AE1FB6-4EA6-428E-8F83-A9A5968F4C8C.jpeg?resize=1668%2C1900
இந்த ஓவியத்தில் இதற்கு முன் பார்த்த மற்ற ஓவியங்களில் இல்லாத சிறப்பம்சம் ஒன்று உள்ளது. அது, சட்டகத்திற்குள் மற்றொரு சட்டகம் எனும் பாணியில் இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு ஃப்ரேமிற்குள் இன்னொரு ஃப்ரேம். ஓவியத்தில் உள்ள கதவுகள் மற்றும் திரைச்சீலைகள் ஒரு சட்டகம் போலச் செயல்பட்டு, சட்டகத்தின் மையத்தில் உள்ள கதாபாத்திரங்களின் மீது அதிகக் கவனத்தைப் பாய்ச்சுகிறது. 

அடுத்து, எஜமானி மற்றும் பணிப்பெண் என்ற ஓவியத்தில் இடம்பெற்றிருப்பதுபோன்ற கண் தொடர்பு இங்கும் இடம்பெறுகிறது. ஆனால், இங்கு அவர்களின் பார்வைகள் ஒருவருக்கொருவர் நேர்மாறாக அமர்ந்திருக்கும் (நிற்கும்) பெண்களின் கண் பார்வைத் தொடர்பாகவே இது அமைந்திருக்கிறது. 
https://i2.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/F9A2A13C-AA8C-43C0-A444-609D83A9861E.jpeg?resize=1668%2C1900
ஒரு ஃப்ரேமிற்குள் இன்னொரு ஃப்ரேம் என்பதை இந்த உதாரணம் மிக அழகாகப் பிரித்துக் காட்டுகிறது. 
https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/5133A847-82A5-43D7-B4EC-661E26F0A03B.jpeg?resize=1668%2C1900
இதில், எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும் அவர்களின் கண் பார்வைத் தொடர்பைக் காணுங்கள். இதுவும், கம்பொஸிஷனுக்குள் அடங்கும். 
https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/1083D89D-0809-43FF-BB99-10FFF38C4772.jpeg?resize=1668%2C1900
நிற்கும் அமர்ந்திருக்கும் பெண்களின் உடை வேறுபாடுகள், பின்புலச் சுவர்களில் படர்ந்திருக்கும் நிழல், வெளிச்சம் வரும் திசையை உணர்த்துகிறது. அந்த வெளிச்சமே, இந்தக் கதாபாத்திரங்களுக்கு ஒளியூட்டும் காரணி. 
https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/DF4C436E-C411-4F35-A0DB-58C0630192CF.jpeg?resize=1668%2C1900

https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/ED2C3FA4-63A1-4B6A-954B-5F86FD314BBB.jpeg?resize=1668%2C1900

https://i2.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/C929AE6F-0401-4A66-8E93-CC8FC20FBA92.jpeg?resize=1668%2C1900
https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/2D6F341F-3B36-486D-B101-BED349C54B6D.jpeg?resize=1668%2C1900
ஓவியம் என்ற ஒரே சட்டகத்திற்குள் எத்தனை சட்டகங்கள் இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். 

https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/5387CF2D-1BC7-47B0-A5B3-26D48641CBFB.jpeg?resize=1668%2C1900
https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/89CB4C81-0735-4052-BDB6-8F2B1249C7EB.jpeg?resize=1668%2C1900
https://i1.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/EC5EE851-AED4-4778-80A5-DEBCAB052879.jpeg?resize=1668%2C1900

https://i0.wp.com/erickimphotography.com/blog/wp-content/uploads/2017/12/58E148A5-DF04-4991-99A1-D199F9AC1AFD.jpeg?resize=1668%2C1900

ஒவியம் மட்டுமல்ல, சிற்பம், கட்டிடக்கலை, இசை என எல்லா கலைகளையும் படித்து, நெருக்கமாக ஆராய்ந்து அந்த நியதிகளை உங்கள் போட்டோகிராஃபிக்கு எப்படிப் பயன்படுத்துவது என்ற வழிமுறையைத் தேடுங்கள். அடுத்த இதழில் சந்திப்போம்…

தொடரும்…

நன்றி: erickimphotography.com